search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai Meteorological Centre"

    • 23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும்.
    • 24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காலை முதல் தொடர்ந்து பங்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    23ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25ம் தேதியில் இருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு தெற்கு பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.

    இருப்பினும் ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை மட்டுமே பொருந்தும் என வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

    24, 25ம் தேதி தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், நாகை, காரைக்காலுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • 16-ந்தேதி வரை பலத்த மழைகு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை விலகி ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

    இதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதுதவிர லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் நில வும் காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை அடுத்த சில நாட்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கின்றது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 6 நாட்களுக்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்ம புரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் 16-ந்தேதி வரை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையில் அதி காலை 1.30 மணியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

    எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    ஆனாலும் மழைநீர் சாலைகளில் இருந்து உடனடியாக வடிந்தது. சுரங்கப் பாதையிலும் பெரிய அளவில் மழைநீர் தேங்காததால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் வடிந்தது. தொடர்ந்து காலையிலும் ஒரு சில இடங்களில் லேசாக மழை தூறியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்
    • சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும்

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் நாளை முதல் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சில இடங்களில் மட்டும் பகலில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று துவங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை வடக்கு மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடேயே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
    • திகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.

    தென் தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், அரபிகடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதிவரை 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

    • அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலை நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில்அதிகப்பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்க 55 கிலோ வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரிக்கு இன்று முதல் 3 நாட்ளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

    கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையை பொருத்தவரை வெப்பநிலை பகல் நேரத்தில் சற்றே அதிகமாக காணப்படும்.

    மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (22-ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் பிற்பகலுக்கு மேல் மழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் குறிப்பாக, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.

    • வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×