என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennimalai Weavers' Cooperative Society"
- பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
- ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பண்டகசாலை சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியில் உள்ளது. இது ஈரோடு சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த பண்டக சாலையில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரை நடைபெற்ற வரவு செலவுகளின் உண்மை தன்மையினை கண்டறியும் வகையில் கணக்கு தணிக்கை செய்ய ப்பட்டது. இந்த தணிக்கை யில் அனைத்து வகை சங்க பதிவேடு ஆதாரங்கள் குறித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 2015-2016-ம் ஆண்டில் பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நர்மதா மூலம் சென்னையில் உள்ள வணிக குற்றப்பிரிவு (புலனாய்வு பிரிவு) கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலையில் ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்த சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என் காலனி சரவணபுரியை சேர்ந்த கணேசன் (55), பண்டக சாலையின் தலைவராக இருந்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் ( 61) மற்றும் விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரன் (61) ஆகிய 3 பேர் ரூ.57 லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.