search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Ministers"

    • முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் கே.மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    கோபி:

    தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொம்ம நாயக்கன் பாளை யம் அடுத்த கே.மேட்டு ப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் நடந்தது. இதில் 1062 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    இந்த முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக கோபிசெட்டி பாளையம் வட்டார சுகா தார மேற் பார்வையாளர் செல்வன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றி னார். பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி முன் னாள் தலைவர் சண்முக த்தரசு முன்னிலை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறு ப்பினர் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 127 பேருக்கு ஈசிஜி பரிசோதனை, 56பேரு க்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    மேலும் 539 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, 64 பேருக்கு விடிஆர்எல் பரிசோதனை, 890 பேருக்கு சிறுநீரில் உப்பு, சர்க்கரை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 பேர் கண் அறுவை சிகி ச்சைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். காச நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முகாமில் அமைக்கப்பட்ட டெங்கு, தொழு நோய், மக்களை தேடி மருத்துவம், காச நோய், எய்ட்ஸ் கட்டுப் பாடு, ஊட்டச்சத்து கண் காட்சியை ஏ.ஜி.வெங்கடா ச்சலம் எம்.எல்.ஏ. பார்வை யிட்டார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா 138 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கூகலூர் ஆரம்ப சுகா தார நிலைய டாக்டர் 124 பேருக்கு பல் சிகிச்சை அளித்தார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் டாக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோபி செட்டிபாளையம் தஷின் மருத்துவ மனை குழுவின ரும், கோபிசெட்டிபாளை யம் எம்.எஸ். மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட த்தின் கீழ் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள ப்பட்டது.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற் பார்வை யாளர் செல்வன் தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், வேலு மணி, நவீன்குமார், சிவா, சக்திவேல், கிரண், செவிலி யர்கள் சுலோச்சனா, லதா ராணி உள்பட பலர் செய்திருந்தனர்.

    • ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
    • அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    சேலம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகு தியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 75). இவர், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.

    அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    ஏற்கனவே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய அவர், இன்று மீண்டும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வரு கிறார்கள். நான் அவர்களி டம் செல்வதில்லை.

    தமிழகம் முழுவதும் பிச்சை எடுத்து பொது மக்களை காக்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு பணம் வழங்கி வருகிறேன். எனது இறுதி காலம் வரை இதனை ஒரு பணியாக செய்வேன்.

    ஒரு வாரத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை யாசகம் கிடைக்கும். அதனை வைத்து இந்த நிதி உதவியை செய்து வருகிறேன் என்றார். 

    பா.ஜனதா ஆட்சியில் முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #BJP
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தின் மீது புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரில் விகிதாசார அடிப்படையில் 7 டி.எம்.சி., தண்ணீரை புதுவைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும் 4,500 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு புதுவைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை. புதுவை மாநில விவசாயிகள் நலனை காப்பது அரசின் கடமை. விவசாயிகள் நலனுக்காக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

    அணை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது. அப்படி இருந்தும் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.

    காவிரி நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் தனித்தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு புதுவை அரசு சார்பில் தொடுக்கப்படும்.



    மாநிலத்தில் எந்த ஆட்சி நடப்பது என்பது முக்கியமல்ல. மாநில மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் புதுவையில் உள்ள பா.ஜனதாவினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட டெல்லி செல்கின்றனர். பிரதமர், அமைச்சர்களை பார்க்கின்றனர். பிரதமரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கி கொடுப்பதில்லை. நான் பிரதமரின் இணை அமைச்சராக இருந்திருக்கிறேன். பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன்.

    ஆனால், முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லாது போனது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தான் நடக்கிறது. காரியம் எதுவும் செய்ய வேண்டாம். முதல்-அமைச்சர்கள் கூறுவதையாவது காது கொடுத்து கேட்க வேண்டும் பாதிநேரம் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் நாடு என்ன ஆவது.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy #BJP

    மாநிலங்களின் முதல்-மந்திரிகளோ, மந்திரிகளோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. #ChiefMinister #ChinaVisit
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்த அவர், தன்னை சீனா செல்ல விடாமல் மத்திய அரசு தடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.

    மம்தாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களின் முதல்-மந்திரிகளோ, மந்திரிகளோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன், பல மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அடிக்கடி சீனாவுக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளது.

    அதன்படி சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) ஆகியோர் அவ்வப்போது சீனா சென்று வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் (2015), அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் (2016), சத்தீஷ்காரின் ராமன் சிங் (2016) போன்ற முதல்-மந்திரிகளும் சமீபத்திய ஆண்டுகளில் சீனா சென்று வந்ததாக கூறியுள்ளது.

    இதைப்போல தெலுங்கானா தொழில்துறை மந்திரி ஜுபள்ளி கிருஷ்ணராவ், எரிசக்தி துறை மந்திரி ஜெகதிஷ் ரெட்டி போன்ற மாநில மந்திரிகளும் அரசு முறை பயணமாக சீனா சென்று வந்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #ChiefMinister #ChinaVisit #Tamilnews 
    ×