search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chool children new"

    • பள்ளியையொட்டிய சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
    • குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள புனித மரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை பள்ளிக்கு வரும் போதும், மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் போதும் சரியான நடைபாதை இல்லாததால் வாகனங்கள் அதிகம் வரும் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் அதிக அளவு உள்ளது.

    பள்ளியை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் தான் குழந்தைகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக கூறி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டியும் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டியும் நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோருக்கும் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது.

    ×