என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "clean india project"
- இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம்.
- வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
புதுடெல்லி:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன்.
இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
மற்றொரு பதிவில், இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியாவை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வ தற்கான முக்கிய முயற்சி யாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று கூறினார்.
இதையடுத்து டெல்லியில் விக்யான் பவனில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தூய்மை இந்தியா பணியை தங்கள் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நினைவு கூரப்படும்.
இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும். தொடர் முயற்சிகள் மூலம் இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும்.
பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்றார்.
காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
- கிண்டி காந்தி மண்டபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
சென்னை:
நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று அங்குள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி தனது கையால் சுத்தப்படுத்தினார். அதன் பிறகு தரையையும் 'மாப்' பயன் படுத்தி சுத்தப் படுத்தினார். குப்பைகளை அகற்றினார்
அதன் பிறகு காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று தனது கையால் குப்பைகளை அகற்றிய அவர் ஒரு வாளியில் சேகரித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தன்னார் வலர்கள் சுமார் 300 பேர் இணைந்து காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி னார்கள். காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கவர்னர் இந்த பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக `தூய்மையே சேவை' என்ற உறுதிமொழி யையும் ஏற்றுக் கொண்டார். கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
- தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது.
- பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் அந்த வார்டு பகுதி மக்களும், கீழவடகரை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவந்தனர்.
குப்பைகள் அதிகளவில் நாள்தோறும் சேர்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. மேலும் குப்பை கொட்டும் பகுதியில் பன்றிகளும் அதிகளவில் வரத்தொடங்கின. இதனை தொடர்ந்து வார்டு பொதுமக்கள் பெரியகுளம் நகராட்சியில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியினை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை தொடர்ந்து நாள்தோறும் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் அனுப்பி குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
இருப்பினும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினர். இதனை தடுக்கும் வகையில் நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி தலைமையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள், குப்பை கொட்டும் இடத்தினை சுத்தப்படுத்தபட்டு அங்கு கோலமிட்டு தூய்மை இந்தியா, பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டனர். பின்னர் அங்கே பூக்களை தூவி அந்த இடத்தை அலங்கரித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கவுன்சிலர் லட்சுமியின் செயலுக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இதையொட்டி கவர்னருக்கு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு 11.35 மணிக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்பு அங்கு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.
கவர்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்ததையொட்டி டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் மற்றும் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னர் தங்க உள்ள விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TNGovernor #BanwarilalPurohit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்