search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness Mission"

    • கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையத்தில் நடைபெற்றது.
    • பாதுகாப்பு படை சீப் கமாண்டர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கருமத்தம்பட்டி,

    காந்தி ஜெயந்தியைெயாட்டி, நேற்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை பணி நடந்தது.

    அதன்படி கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக எல்லை பாதுகாப்பு படையினர் 5 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நடந்து சென்று வழி நெடுகிலும் உள்ள முட்புதர்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட்டு குப்பைகளை அகற்றினர்.

    மேலும் பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த தூய்மை இயக்க பணியில் எல்லை பாதுகாப்பு படை சீப் கமாண்டர் கமல் கஹல்பி, டெப்டி கமெண்ட் ராத்தூர் விஷால் சர்மா, கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.

    இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.

    நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    • பாலாஜி நகர், திருப்பாலைத்துறை, பி.டி.ஓ அலுவலகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா, நீர்நிலைகள் தூய்மை பணி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பாலாஜி நகர், திருப்பா லைத்துறை, பி.டி.ஓ அலுவ லகம் காலனி சாலை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சைக்கிள் பேரணி பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மையை வலியுறு த்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்தது. திருப்பா லைத்துறை பாலைவனநாதர் கோவில் சாலையிலிருந்து பெரியார் சிலை வரைக்கும் வடிகால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், முத்து மேரி, தேன்மொழி, கீர்த்தி வாசன், புஷ்பா, சமீரா பர்வீன் ஜாஃபர் அலி பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சிபணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரத்தில்தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி சிறப்பு முகாம் பெற்றது.
    • விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி “ என் நகரம் என் பெருமை” “என் குப்பை என் பொறுப்பு” என்ற சொல்லிற்கேற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி சிறப்பு முகாமினை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை தொடங்கி வைத்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தூய்மை இயக்கத்திற்கான பணியினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதே தினத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமை அன்று விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி " என் நகரம் என் பெருமை" "என் குப்பை என் பொறுப்பு" என்ற சொல்லிற்கேற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.

    அதனையொட்டி இன்று விழுப்புரத்தில் நீர் நிலைகள் தூய்மை செய்து கரைப்பகுதிகளில் மரம் நடும் பணியினை எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி , நகர மன்ற தலைவர் தமிழச்செல்வி ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள அய்யனார் குளம் மற்றும் கன்னியா குளம் பகுதிகளை தூய்மையாக்கி கரைப் பகுதிகளில் மரம் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆணையர் சுரேந்திர ஷா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×