search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Candidate"

    • தேர்தலில் முதல்வர் வேட்பாளரின் பெயரை பா.ஜ.க. அறிவிக்காமலே போட்டியிட்டது
    • 1990ல் அரசியலில் நுழைந்த சாய், நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர்

    கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17 தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் நேருக்கு நேர் தீவிரமாக களமிறங்கின.

    தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பா.ஜ.க., பதிவான வாக்குகளில் 46.27 சதவீதம் பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றது.

    தேர்தல் அறிக்கையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் சாதனைகளும் மட்டுமே தேர்தலில் பா.ஜ.க.வினரால் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளரின் பெயர் அப்போது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் வெளியான முடிவுகளில் கட்சி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து பல யூகங்கள் நிலவி வந்தன.

    இன்று சத்தீஸ்கர் மாநில ராய்பூரில், 54 எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங்கிற்கு நெருக்கமானவரும், பா.ஜ.க.வின் தேசிய செயல் கமிட்டியின் உறுப்பினருமான 59 வயதான விஷ்ணு தியோ சாய் (Vishnu Deo Sai), முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1990ல் அரசியலில் ஆர்வத்துடன் நுழைந்தவர் சாய்.

    2006ல் பா.ஜ.க.வின் சத்தீஸ்கர் மாநில தலைமை பொறுப்பை ஏற்ற சாய், நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர்.

    2023 நவம்பர் தேர்தலில் சாய், சத்தீஸ்கரில் உள்ள குன்குரி (Kunkuri) தொகுதியில் 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்ற சாய், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட சுமார் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

    2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், சாய் எக்கு துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss #GKMani
    மதுரை:

    மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

    வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.

    இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.

    வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    கொள்கை சார்ந்த கூட்டணி என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் ராமதாஸ் முடிவு எடுப்பார்.


    மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கூட்டணி அமைப்போம். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம்.

    ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
    ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. #congress #Rajasthanelection

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெறுவதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி இருக்கிறது. அதே போல் அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அங்கு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.

    அந்த மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றிலும், உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


    எனவே, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் எல்லா மாநிலத்திலும் நிலவுவது போலவே ராஜஸ்தான் மாநில காங்கிரசிலும் கடுமையான கோஷ்டி பூசல் நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால யார் முதல்-மந்திரி என்பதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லை.

    முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் சில தலைவர்கள் முதல்-மந்திரி பதவி போட்டியில் உள்ளனர்.

    அங்கு பாரதிய ஜனதாவில் வசுந்தரராஜேவை மீண்டும் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சியிலும் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்துள்ளது.

    ஆனால், முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன் கூட்டி அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினேஷ் பாண்டே கூறும்போது, கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் பெயரை முன்கூட்டி அறிவிக்க மாட்டோம்.

    ராகுல் காந்தி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளை கூட்டாக செய்வோம். முதல்-மந்திரி யார்? என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறினார். #congress #Rajasthanelection

    ×