search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Common civil law"

    • பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் கோப்பைத் தோட்டத்தில் உள்ள பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா்.

    இதில், மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் முறையில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பெளத்த மாணவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடா்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் யாசா் அராபத், பொருளாளா் சிராஜ்தீன், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா் அப்பாஸ், துணைச் செயலாளா்கள் ஷேக் பரீத், ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனீபா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

    • நமது நாட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
    • 1947 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த தருணமே இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் .

    திருப்பூர் :

    இந்து முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் நாட்டின் எதிர்கால நன்மைகளுக்கும் உடனடியாக மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நமது நாட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். 1947 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த தருணமே இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும் .அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தை அமல்படுத்தி விட்டனர்.

    எனவே நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருதி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஆதரவுகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.
    • தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில், மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயகரீதியிலான, பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான்மையான, சகிப்புத்தன்மை இல்லாத, பிற்போக்குத்தனமான மாநிலமாக மாற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், மாநில மக்கள் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

    கர்நாடகத்தின் எதிர்காலத்துக்காக, அங்கு பா.ஜ.க. வெற்றி பெறுவதையும், அந்த வெற்றியின்மூலமாக அதன் அண்டை மாநிலங்களில் அந்தக் கட்சி நுழைவதையும் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

    பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளதே என்று கேட்கிறீர்கள். அவை இரண்டுக்கும் சமூகத்தைப் பிளவுபடுத்துகிற, சமூக மோதல்களைத் தூண்டி விடுகிற சாத்தியம் உண்டு.

    சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது என்று நாம் பார்த்திருக்கிறோம். எனவே கர்நாடக மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிரகாரிப்பார்கள் என்றே கருதுகிறேன்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற பேச்சை பா.ஜ.க. பிரச்சினை ஆக்கி இருக்கிறதே என கேட்கிறீர்கள். நாங்கள் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.

    வெறுப்புணர்வை பரப்புகிற எல்லா அமைப்புகளையும் காங்கிரஸ் எச்சரித்து இருக்கிறது.

    சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது.

    தவிரவும், சட்டப்படி ஒரு அமைப்பை தடை செய்வது என்பது நிதித்துறை செயல்பாடு.

    நாங்கள் சட்டமும், அரசியல் சாசனமும் புனிதமானவை, அவற்றை தனி நபர்களோ, பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் அல்லது இது போன்ற வெறுப்புணர்வைப் பரப்புகிற அமைப்புகளோ மீற முடியாது என்று நம்புகிறோம். நாங்கள் தடை விதிப்பது உள்பட சட்டப்படி அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுப்போம். கர்நாடக மாநிலத்தில் நான் குடியிருக்கவில்லை. எனவே அங்கு முழுமையான ஆய்வு நடத்தி, காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என என்னால் கூற இயலாது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைப் பெறும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தோழர்கள் கூறுகிறார்கள்.

    தன் மீது அவதூறு வாரி இறைக்கப்படுவதாக பிரதமர் மோடி பிரச்சினை எழுப்பி இருக்கிறாரே என்கிறீர்கள். அவதூறு வாரி இறைப்பது என்றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல.

    சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? இது அர்த்தமற்ற செயல் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×