search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congratulation"

    • அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்‌.

    மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செய லாளராக டேவிட் அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த மகேந்திரன் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க.விற்கு மகேந்திரன் தாவியதை அடுத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.

    இவர் அ.ம.மு.க. வில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

    புதிய மாவட்ட செய லாளராக டேவிட் அண்ணா துரையை நியமித்து கட்சியின் பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டசபை தொகுதி கள் வருகின்றன.

    எனவே புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரைக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்து ழைப்பை நல்கிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சரவணன் நியமிக்கப்பட் டுள்ளார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • பா.ஜனதாவின் கொள்கை திட்டங்கள் அடங்கிய பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் செயற்குழு கூட்டம், மாவட்ட அமைப்பாளர் மேனகா தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினரும் நீலகிரி மாவட்ட மகளிர் அணி பார்வையாளருமான ஈஸ்வரி பத்மநாபன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    கல்பனா தேவி வரவேற்றார். தொடர்ந்து கட்சியின் பிரச்சாரம் மற்றும் கலை கலாசார பிரிவு சார்பில்

    பின்னர் நடந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, நீலகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் அண்ணாமலைக்கு மகளிர் அணி சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று உற்சாக வரவேற்பு அளிப்பது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் மாலினி ஈஸ்வரன், பொதுச் செயலாளர் டாக்டர் அனிதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தர பாண்டியன், கல்பனாமகாலிங்கம், மஞ்சுளா சிவகணேசன், செயலாளர் பத்மஜா பாலச்சந்திரன், சந்திரா சகாயராஜ், பொருளாளர் தயாமணி சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விஜயகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.

    • டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    • வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து, பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஞானகுரு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் உட்பட நிர்வாகிகள் ராஜாசண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ.பி.சி.ஜி., திட்டத்தில், வரியின்றி மெஷின்களை இறக்குமதி செய்வதில் நீடிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகங்களின் (டி.ஜி.எப்.டி.,) கவனத்துக்கு கொண்டுசென்று இக்கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும்என டெக்பா சங்க நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    கர்நாடக தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.#KarnatakaElection2018
    எப்போதுமே பொறுமை வேண்டும். முந்திரிக்கொட்டை மாதிரி முந்தக்கூடாது என்பதற்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளே மிகச்சிறந்த உதாரணமாகும்.

    காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரியனை ஏறுவதற்கு காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அக்கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார். அதே நேரத்தில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற கோ‌ஷத்துடன் களம் இறங்கிய பாரதிய ஜனதா கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடித்தது.

    பா.ஜனதாவின் இந்த எண்ணம் எளிதாக ஈடேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நேற்று காலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் 121 தொகுதிகளையும் தாண்டி பா.ஜனதா முன்னிலையில் இருந்தது. காலையில் இருந்த இந்த ஏற்றம் மாலையில் இறங்கு முகமாக மாறியது. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவால் அரிதி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை கைப்பற்ற முடியாமல் போய் விட்டது.

    ஆனால் தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதா எளிதாக ஆட்சியை பிடித்து விடும் என்று எண்ணி முன்கூட்டியே வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர உள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீரை திறக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தியையே அனுப்பி விட்டார். அதில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததுடன் சுறுசுறுப்பான, மனசாட்சியோடு நேர்மையான உழைப்பால் பெற்ற இந்த வெற்றி உங்களின் புகழ் வெற்றிக்கு மேலும் ஒரு மணிமகுடம் என்றும் கூறியிருந்தார்.



    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா பெற்ற வெற்றியை தமிழக பா.ஜனதா கட்சியினரும் கொண்டாடினர். அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    பா.ஜனதா கட்சியினரின் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மாலையில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜனதா கட்சியினர் விரக்தியில் மூழ்கியுள்ளனர். #KarnatakaElection2018
    ×