என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cotton seeds"
- பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வதும், வாங்கி பயிர் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக உங்கள் பகுதி 2விதை ஆய்வாளருக்கு அல்லது விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண். 0462 2553017-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இயக்குனர் உத்தரவின்படி மாவட்டந்தோறும் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், விதை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.