என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "counting and writing"
- ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
- இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னிமலை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பாக சென்னிமலை யூனியன், அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் தொடக்க பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.
வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
- பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
- தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
பல்லடம்,
பல்லடத்தில், வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படித்த 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதையடுத்து வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிடும் வகையில் தமிழக அரசு 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 100 அரசு,மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
நன்னிலம்:
நன்னிலம் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் ஐந்து நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருக பாஸ்கர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
129 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்வட்டார வளமைய மேற்பார்வை யாளர் நடேஷ் துரை வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்