search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "counting of votes"

    • வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்.
    • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தோ்தல் நடைபெற்றுள்ளது.

    ஸ்ரீநகர்:

    90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடை பெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலை யில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.


    இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணியும் போட்டியிட்ட நிலையில், இவை சில தொகுதிகளில் வெல்லக் கூடும். ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட கிடைப்பதே கடினம் என்று கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

    அரியானா, ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதை யொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகு திகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதி களில் தோ்தல் நடைபெற்றது.

    மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. சமீபத்திய பாராளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகளைவிட (58.58 சதவீதம்) இது அதிகமாகும்.

    ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஜம்மு-காஷ்மீா் தோ்த லில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி யாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.

    அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதி கள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அதுபோல 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    • முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.
    • சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    அந்தப் பகுதயில் போக்கு வரத்தும் மாற்றி அமைக்கப் பட்டு இருந்தது. அந்த பகுதி யில் பேரி கார்டுகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணிக்கான ஊழியர்கள் மற்றும் முகவர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை நடை பெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர் களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் படிவம் 18 வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு சில முகவர்கள் மட்டுமே படிவம் 18 வைத்திருந்தனர். படிவம் 18 இல்லாத முகவர்களை போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் முகவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு படிவம் 18 இல்லாமல் அடையாள அட்டை வைத்திருந்த முகவர்களை போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
    • கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியதால் கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந் தது.

    இதற்கிடையில் கோடை காலத்தில் கடும் வெயில் கொளுத்தியதாலும், அதன்பின்னர் தொடர் மழை பெய்ததினாலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    மேலும் விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து இடை இடையே நிறுத்தப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தையும் சுற்றுலா பயணிகள் சரியாக பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் இந்த 3 நாட்களும் லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறை கொடுக்கப்பட வில்லை. இதனால் ஏற்கனவே லாட்ஜ்களில் அறை புக்கிங் செய்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வராமல் அறைகளை காலி செய்தனர். இதனால் கன்னியாகுமரிக்கு கடந்த 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடை பெற்றதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

    இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது. இதனால் கன்னியாகுமரி வியாபாரிகள் வியாபாரம் நடக்காத விரக்தியில் உள்ளனர்.

    • வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல்.
    • முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    மத்திய சென்னையில் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் 6 தொகுதியில் இருந்து பெட்டிகள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்றின் போது வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 12-வது தெருவில் வாக்கு எண்ணும் எந்திரம் பழுதானதால் வேறு எந்திரம் மாற்றப்பட்டதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    அதேபோல ஆயிரம்விளக்கு தொகுதி 2-வது சுற்று பணி ஆரம்பிக்கும் போது 4-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்திரம் பழுதானது. அதையும் சீர்செய்யும் பணி நடைபெற்றதால் அதேபோன்று காலதாமதம் ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 3-வது சுற்றில் துறைமுகம் தொகுதியில் 8-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்த பழுதானது. சீர் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற மின்னணு பழுது காரணமாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றது.

    காலை 10 மணிவரை ஒரு சுற்று முடிவு மட்டுமே அறிவிக்க முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பெயர்பலகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே 2-வது சுற்று தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன.
    • அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

    அதாவது முதல்கட்ட தேர்தல் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட தென் கர்நாடகத்தில் அமைந்திருக்கும் 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தல் சிவமொக்கா உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கும் நடந்தது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 474 வேட்பாளர்கள் உள்ளனர்.

    இதில் முக்கியமான தலைவர்களான முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும், ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாவியிலும், குமாரசாமி மண்டியாவிலும், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரிலும் போட்டியில் உள்ளனர். இவர்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள்.

    மைசூரு தொகுதியில் மன்னர் யதுவீர் உடையார் பா.ஜனதா சார்பில் களத்தில் உள்ளார். பா.ஜனதா தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

    ஆபாச வீடியோ வெளியாகி அரசியலில் புயலை கிளப்பிய பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கர்நாடகத்தில் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    பெங்களூரு வடக்கு தொகுதி-விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள புனித ஜோசப் இன்டியன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு மத்தி-மவுண்ட் கார்மல் பி.யூ.கல்லூரி, பெங்களூரு தெற்கு-ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ.கல்லூரி, சிக்பள்ளாப்பூர்-தேவனஹள்ளி நாகராஜா என்ஜினீயரிங் கல்லூரி, கோலார்-கோலார் அரசு முதல் நிலை கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    அதுபோல் துமகூரு, மண்டியா, மைசூரு , சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், சிக்கோடி தொகுதி, பெலகாவி, விஜயாப்புரா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே , சிவமொக்கா, உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா , சித்ரதுர்கா ஆகிய தொகுதி களுக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.

    யாதகிரி மாவட்டம் சுராப்புரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் யாதகிரி அரசு பி.யூ.கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறு வதால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட உள்ளது.

    • 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
    • 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் நாளை மறுநாள் (4-ந் தேதி) எண்ணப்பட உள்ளன.

    இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வைக்கப் பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை 1,384 பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாத்து வருகின்றனர். மேலும், வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    வாக்கு எண்ணும் பணியில் வடசென்னையில் 357 பேர், தென் சென்னை யில் 374 பேர், மத்திய சென்னை யில் 380 பேர், 322 அலு வலக உதவியாளர்கள் என மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கைக் காக 3 பாராளுமன்றத் தொகுதிகளிலும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேசைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வட சென்னை பாராளுமன்ற தொகுதி உள்ளிட்ட 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதா? என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டு அறிந்தார். தேர்தல் ஆணைய விதிகளின் படி முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்றும், எந்த கட்சியும், வேட்பாளரும் ஆட்சேபிக்காத வகையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே தபால் வாக்குகள் இறுதியாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆா.எஸ்.பாரதி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கடந்த 31-ந் தேதி மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் பணி தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை தேர்தல் நடததும் அதிகாரியால் பெறப்பட்ட அனைத்து தபால் வாக்குகளும் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.
    • முகவா்களின் பெயா், கையொப்பம், இரண்டு புகைப்படங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தோ்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை பணிக்காக அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளா்கள் சார்பில் இருக்க வேண்டிய முகவா்களின் எண்ணிக்கை குறித்து தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனா்.

    பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முகவா்களை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 முகவா்களையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் ஆறு மேஜைக்கு ஆறு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    தபால் வாக்குச் சீட்டு எண்ணுமிடத்தில் ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பார். அவருடன் ஒரு முகவரையும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்ட மன்ற தொகுதிகள் இருந்தால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 நபா்கள் வீதம் 90 முகவா்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறை ஆகிய இடங்களில் எட்டு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    மொத்தமாக ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.

    வேட்பாளா்களின் சார்பில் நியமிக்கப்படும் முகவா்கள் ஒவ்வொருவரும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கென வரையறுக்கப்பட்ட படிவம் 18-ல் முகவா்களின் பெயா்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அதேபோல, முகவா்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

    அதன்படி, மத்திய மற்றும் மாநில அமைச்சா்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், நகா்மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறு வனங்களின் தலைவா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறு வனங்களின் பகுதி நேர உறுப்பினா்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரை முகவா்களாக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
    ×