search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crop insurance amount"

    • விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்கவில்லை.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 14 வாரம் ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரிகளுக்கும், பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியும் உள்ளேன். இதன் எதிரொலியாக தற்போது 13 வாரங்களுக்கு மட்டும் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை நடவடிக்கை எடுத்த மத்திய நிதி மந்திரிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டிற்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. இந்த பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க படவில்லை. இதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பிரதமர் கிஷான் திட்டத்தில் மத்திய அரசு, மாநில அரசை தவிர்த்து நேரடியாக விவசாயிகளுக்கு நிதி அனுப்ப நடவடிக்கை எடுப்பது நல்ல நடைமுறையாகாது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசு அரசியல் சாசனப்படி இதற்காக சட்ட சபையை கூட்டி மசோதா தாக்கலை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பிரச்சி னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. சுதந்திர போ ராட்டத்தில் பழங்குடியினர் பங்கு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கும்.

    விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் மத்திய நிதி மந்திரியின் நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு இதுவரை எந்த தகவலம் இல்லை. இதில் என்னை புறக்கணிப்பது மாவட்ட மக்களை புறக்கணிப்பது ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாகன், நாகேந்திரன், வெயிலுமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    100 நாள் தொழிலாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 14 வார கால ஊதியம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தார். மேலும் போராட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 13 வார கால ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருதுநத்தத்தை சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் சகுந்தலா கூறுகையில், மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் நடவடிக்கையால் சம்பள நிலுவை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி கூறுகையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.13 வார கால நிலுவை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்றும் சில நாட்களில் மீதியுள்ள சம்பள நிலுவை தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    • மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
    • ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கபிஸ்தலம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம் ஒன்றிய 24- வது மாநாடு கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் முருகேசன் தலைமையில்நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் புகழேந்தி வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டில் சங்க உறுப்பினர் கிருஷ்ணன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செலுத்தப்பட்டதுஒன்றியச் செயலாளர் கனகராஜ் வேலை அறிக்கை வாசித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் மாநாட்டை துவங்கிவைத்து உரையாற்றினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர்

    ஆர்.தில்லைவனம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, மாதர் சங்கம் சந்ரா, விதொச ஒன்றிய செயலாளர் இளங்கோவன், இளைஞர் பெருமன்றம் லட்சுமி நாராயணன்ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    மாநாட்டில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனடியாக ரத்து வாரி பட்டா வழங்கிட வேண்டும்.விவசாயத்தை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை உடனடியாக பிடித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு,கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • தியாகியின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம் அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் அனைத்து கிராமங்க ளிலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயிகள் பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்ற னர். கடந்த சில ஆண்டுக ளாகவே பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காரை வருவாய் உள்ள டங்கிய 14 கிராமங்களில் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் விவசாய பணி களை மேற்கொள்ளும்போது பயிர் காப்பீடு செய்து வரு கின்றனர். ஆனால் 4 ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்ததால் விளை நிலங்கள் வறண்டு காணப் பட்டது.

    மோட்டார் பாசன மூலம் ஓரிரு இடங்களில் விளைச் சல் ஏற்பட்டுள்ளது. அதி காரிகள் கணக்கில் கொண்டு அந்த பகுதி முழுவதும் விளைச்சல் அடைந்துள்ள தாக கணக்கீடு செய்ததால் காப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை கண்மாய் பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை கடன் மற்றும் விவசாய கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ லில் காப்பீடு தொகை கூட கிடைக்காததால் விவசாயி கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    பயிர் காப்பீடு செய்யும் பொழுது அரசு அந்நிறுவ னத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத கிராமங்க ளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர போராட்ட தியாகி யின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-

    விவசாயி சக்கரபாணி:- பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். அதை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கலெக்டர்: விரைவில் நிலுவைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி பிரபாகரன்:- திருப்பாச்சனூரில் இருந்து தளவானூர் வரை மலட்டாறு, நரியாறு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து நிலமாக்கி விட்டனர். இந்த ஆறுகள் 75 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.

    கலெக்டர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயி நாராயணன்:- அகலூர் ஏரியின் மதகு சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் அதை சீரமைக்கவில்லை. அதுபோல் ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்களும் தூர்ந்து போயுள்ளது. அந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலெக்டர்: ஏரி மதகை சீரமைக்கவும், நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரவும் பொதுப்பணித்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ஸ்டாலின்மணி:- துத்தனந்தல் அணைக்கட்டுக்கு நீர்வரத்து வரக்கூடிய வாய்க்கால்கள் தூர்ந்து போயுள்ளது. அதை உடனடியாக தூர்வாரினால் வரக்கூடிய பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு நீர்பாசனம் கிடைக்கும். திருக்கோவிலூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, கரும்புக்குரிய நிலுவைத்தொகையை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அதை உடனே பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கலெக்டர்: நீர்வரத்து வாய்க்கால் விரைவில் தூர்வாரப்படும். கரும்பு நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகத்திடம் பேசி விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி மோகன்குமார்:- கடந்த 2016-ல் நெல், மணிலா, உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்தும் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வந்து சேரவில்லை.

    கலெக்டர்:- நமது மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை நெல்லுக்கு ரூ.53 கோடி ஒப்புதல் ஆகியுள்ளதில் விவசாயிகளுக்கு ரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. உளுந்துக்கு ரூ.41 கோடி ஒப்புதல் ஆனதில் ரூ.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 8 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. மணிலாவிற்கு ரூ.1½ கோடி ஒப்புதல் ஆகியுள்ளது. அந்த தொகை இன்னும் வரவில்லை. இந்த தொகைகள் கூடிய விரைவில் வந்ததும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ரவிச்சந்திரன்:- சங்கராபுரத்தில் இருந்து பாவந்தூருக்கு அரசு பஸ்கள் தடம் எண் 7, 8 கடந்த சில மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கலெக்டர்: விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    விவசாயி ஏழுமலை:- பிரம்மதேசம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். புதுக்குப்பம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினையை போக்க வேண்டும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் 1 மணி நேரம் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் நேரம் அவர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலெக்டர்: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் கடன் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதால்தான் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். எனவே மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எண்டியூரில் கால்நடை மருத்துவர் கூடுதல் நேரம் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயி வேலாயுதம்:- கரடிசித்தூர் கிராமத்தில் அரசு பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கலெக்டர்: விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வேளாண் இணை இயக்குனர் சண்முகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×