search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Culprit arrest"

    சென்னைக்கு வந்த சவுதி விமானத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தலைமறைவான முன்னாள் குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.

    இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.

    அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.

    7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.

    விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
    ராயபுரம் அருகே செல்போன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.70 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரஷீத்கான். செல்போன் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் வசூலான பணம் ரூ. 70 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏழுகிணறு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் ரஷீத்கானை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூ. 70 லட்சத்தை பறித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9½ லட்சத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சவுகார்பேட்டையை சேர்ந்த முத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். #tamilnews
    திருச்சியில் 20 கொலை வழக்கில் 20 வருடங்களாக தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த செந்தில் குமார் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இதில்19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான செல்வம் 20 வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நாமக்கலில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். #tamilnews
    ×