என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CURD AND GHEE"
- தயிர், நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்று த.மா.கா. விவசாய அணி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
- மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்
திருச்சி:
த.மா.கா. விவசாய அணி சார்பாக மின் கட்டணம், தயிர், நெய் விலை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடையும் சூழ்நிலையில் தமிழக மக்கள் ஏற்கனவே பால் விலை, மளிகை பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் 70 சதவீத பாமர ஏழை மற்றும் நடுதர மக்கள் அல்லல்படுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை வாய்ப்பு இழந்து வருவாய் இழந்து பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற காரணங்களால் வருவாய் இன்றியும் உள்ளனர்.
தற்போது மாநில அரசு மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு போன்றவை மக்களை மேலும் கஷ்டத்திலும், வறுமையிலும் தள்ளும் ஓர் நிகழ்வாக மாறும் சூழல் உள்ளது.
பழைய மின் கட்டணம் 200 யூனிட்டுக்கு ரூ.170, புதிய மின் கட்டணம் ரூ.225, 300 யூனிட்டுக்கு ரூ.530, புதிய கட்டணம் ரூ.675, 400 யூனிட்டுக்கு ரூ.830, புதிய கட்டணம் ரூ.1,125.
இப்படி விலையேற்றம் ஒரு பக்கம் என்றால் விவசாயிகளுக்கான உரங்கள் விலையேற்றம் விவசாயப் பயன்பாடு அரசு வாடகை எந்திரங்கள் வாடகை உயர்வு, மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
ஆகையால் மாவட்ட கலெக்டர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட ஆட்சியியல் முறையை மீண்டும் அமுல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.