search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devar Jayanti Festival"

    • ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
    • 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்

    ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிைல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இன்று காலை கணபதி யாக பூைஜகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு சிறப்ப பூஜை நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு ஆன்மீக சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம் நடக்கிறது.

    நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற் பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் .
    • 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 115- வது தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தேவர் ஜெயந்தி, மற்றும் குருபூஜையை முன்னிட்டு அரசு அறிவுரைகளின் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது.

    இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடை பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்மந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், மது பாட்டில்கள் எடுத்துச் செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    சொந்த ஊர்களில் 30-ம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எந்த வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெரு க்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.

    ராஜபாளையம் -ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி-சாத்தூர்- விருதுநகர்-தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை-காந்தி நகர்-ராமலிங்கா மில்-கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு)-கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி-பாலையம்பட்டி பை-பாஸ்-காந்தி நகர்-ராமலிங்கா மில், கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு) -கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    திருச்சுழியில் இருந்து வரும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    நரிக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன்-கோட்டை மேடு-நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர்-பிடாரிசேரி-வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.

    தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    ×