search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees special worship"

    • திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
    • விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    திண்டுக்கல்:

    முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.

    இங்குள்ள 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. அதனை தொட ர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இதே போல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகல்நகர் ரயிலடி சித்தி விநாயகர் கோவில், ரவுண்டு ரோடு கற்பக விநாயகர் கோவில், நேருஜிநகர் கணபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விநாயகருக்கு பிடித்த மான கொலுக்கட்டை, சுண்டல், பழங்கள், பொரிகடலை போன்றவை படையலாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய வடி விலான களிமண் சிலைகள் தயார் செய்து விற்கப்பட்டன. இந்த சிலைகள் ரூ.10 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை யில் விற்பனையானது. விதவிதமான வடிவங்களில் பல வண்ணங்களில் தயார் செய்து விற்கப்பட்டன. மேலும் விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ மாலையும் விற்பனை செய்யப்பட்டன.

    இதுதவிர பூஜைக்கு தேவையான பூக்கள், தேங்காய், வாழைப்பழம், பேரிக்காய், கொய்யா, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் அதிக அளவில் விற்பனை யாகிறது.

    • புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் வைணவ திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. இதனால் இந்த மாதத்தில் அனைத்து நாட்களும் வைணவ திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக இந்த மாதத்தின் சனிக்கிழமை களில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி புரட்டாசி மாதத்தில் 4வது சனிக்கிழ மையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர்.

    தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், ரெட்டி யார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவில், எம்.வி.எம்.நகர் தென்திருப்பதி வெங்கடா சலபதி கோவில், வடமதுரை சவுந்திர ராஜபெருமாள் கோவில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவி ல்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புரட்டாசி மாதத்தில் விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பலர் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று தங்கள் வீடுகளில் உணவு சமைத்து விரதத்தை முடித்தனர்.

    • திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது.
    • ஆடி கடைசி நாட்களான நேற்றும், இன்றும் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. வாகன ஓட்டுன ர்களை விபத்தில் இருந்து காக்கும் கடவுளாக கருத ப்படும் வண்டி கருப்பண சாமிக்கு ஆடி மாதம் முழு வதும் பல்வேறு நேர்த்தி க்கடன்கள் செலுத்தப்படும்.

    குறிப்பாக வாகனங்கள் வைத்துள்ளவர்கள் இங்கு வந்து ஆடுகளை பலியிட்டு அதனை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வழங்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் இது போன்ற வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து ஏராளமானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    குறிப்பாக ஆடி கடைசி நாட்களான நேற்றும், இன்றும் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இன்று திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சென்ற சரக்கு ரெயிலை நிறுத்தி அதில் இருந்த ஊழியர்கள் இறங்கி வந்து வண்டி கருப்பணசாமியை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து எலுமிச்சம்பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை எடுத்து வந்து ரெயில் முன்பு கட்டி அதன் பிறகு அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் வண்டி கருப்பணசாமி சாலை விபத்துகளை தடுக்கும் கடவுளாக இருந்து வருகிறார். இந்த கடவுளுக்கு ரெயிலை நிறுத்திய சாமி என்ற பெயரும் உள்ளது. சாலை விபத்துகள் மட்டுமின்றி ரெயில் விபத்துகளையும் வண்டி கருப்பணசாமி தடுத்து வருவதாக நம்பி வருகிறோம்.

    இதனால் ஆடி மாதத்தில் இந்த கடவுளுக்கு வழிபாடு நடத்தி தங்கள் வாகன ங்களுக்கு பூஜை செய்து அதன் பிறகு பயணத்தை தொடர்ந்தால் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நம்புகிறோம். அதன்படி ஆடி கடைசி நாளான இன்று ஏராளமான வாகனங்கள் மூலம் இங்கு பக்தர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் சுவாமி வழிபாடு மட்டுமின்றி ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனும் செலுத்தி வருவதில் இருந்தே வண்டி கருப்பணசாமியின் மகத்தும் தெரிய வரும் என்றனர். பக்தர்கள் வருகையால் இன்று கோவில் வளாகத்தில் கூட்டம் அலை மோதியது.

    • ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

    பழனி:

    பழனி அருகே பாப்பம்பட்டியில் பழமையான மகாலட்சுமிஅம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் குரும்பர் சமுதாய மக்கள் சார்பில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். குதிரையாறு அணையில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனைதொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் ஆவேசமாக தேங்காயை உடைத்து சிதறவிட்டார். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,

    பல வருடங்களாக கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். நினைத்ததை அம்மன் நிறைவேற்றி தருவார். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    திண்டுக்கல்:

    ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாராதணை நடத்தப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    நகரில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில், நேருஜிநகர் பன்னாரிஅம்மன் கோவில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோவில், வழித்துணை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன், பாதாளகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் மெங்கிள்ஸ் ரோட்டில் உள்ள பாலநாகம்மாள் கோவிலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனை கண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    • ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவிலில் இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.
    • நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளை யார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகள் கொரோ னாவுக்கு பிறகு இவ்வருட திருவிழா கடந்த 8ந் தேதி இரவு தொடங்கியது.

    9ந் தேதி காலையில் அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று அம்மனை வழிபாடு செய்து அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும், சிறப்பு அலங்கா ரங்கள் செய்யப்பட்டு, தீபா ராதனை செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் பூ குழி இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். இந்நிகழ்ச்சியில் பிள்ளையார்நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராம பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழி பட்டனர்.

    • மகாலெட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட ஆண்டிபட்டி யில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடை த்தும், சாட்டையால் உடலில் அடித்துக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெ ருக்கு விழா நடத்தப்பட்டது.

    முன்னதாக மகாலட்சுமி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்ப ட்டது. பின்னர் அம்மன் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து அம்மன் எழுந்தருளி பக்த ர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களின் சேர்வை ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது. அதனை த்தொ டர்ந்து இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர், செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைக் காண சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்தி ருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்ைட காமராஜர் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் 2500 பேருக்கு மேல் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா, கரிகாலபாண்டியன், கோவில் நிர்வாகிகள் சுரேந்திரன், பானுமதி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரன், முருகன், செல்வராஜ், சாத்தப்பன், செல்வம், யோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் வைகை ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.

    பிள்ளையார்நத்தம், பெருமாள்கோவில்பட்டி, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். மேலும் சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகளை பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா, ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    நிலக்கோட்டை டி.எஸ்.பி. சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குரு வெங்கட்ராஜ் (நிலக்கோட்டை), வனிதா (விளாம்பட்டி) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

    திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய்முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×