search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindigul dragons"

    • திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

    • திருப்பூர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல்.
    • அதிரடியாக விளையாடிய அஸ்வின் அரை சதம் விளாசினார்.

    சென்னை:

    நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

    அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மான் பப்னா, கனேஷ் மற்றும் அமித் சாத்விக் சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

    19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக விமல் குமார் - அஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். தொடங்கம் முதலே இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் எடுத்த நிலையில் விமல் குமார் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் 10.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி வருகிற 4-ந் தேதி நடக்கவுள்ளது.

    • இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர்.
    • ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    சேப்பாக் அணிக்கு துவக்க வீரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆக ஜெகதீசன் மற்றும் அபராஜித் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த வந்த பிரதோஷ் (19), டேரில் ஃபெராரியோ (4), சித்தார்த் (7) என சேப்பாக் அணி அடுத்தத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 72 மற்றும் 22 ரன்களை விளாசினர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரரான விமல் குமார் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் சரத்குமார் மற்றும் சுபோத் பாட்டி முறையே 12 மற்றும் 14 ரன்களை எடுத்தனர்.

    இதனால் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி குவாலிபயர் சுற்றின் 2 ஆவது போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    டிஎன்பிஎல் குவாலிபயர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். 

    • சேப்பாக் அணி தரப்பில் அபராஜித் அரை சதம் விளாசினார்.
    • திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜெகதீசன் - அபராஜித் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரதோஷ் 19, டேரில் ஃபெராரியோ 4, சித்தார்த் 7 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ், சுபோத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியுடன் மோதும்.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் வருகிற 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் வருகிற 2-ம் தேதி சென்னையில் மோதும். தோற்கும் அணி வெளியேறும். 

    • திண்டுக்கல் அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • மதுரை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சென்னை:

    8-வது தமிழ்நாடு பிரீமி யர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தன.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோது கின்றன.

    திண்டுக்கல் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2: தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.

    அந்தஅணியில் அஸ்வின், ஷிவம்சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    மதுரை அணி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மதுரை அணியில் ஹரி நிசாந்த், கவுசிக், சதுர்வேத், முருகன் அஸ்வின், மணி கண்டன், அஜய் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.

    4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது. 

    • 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    அதேவேளையில், 2 ஆட்டங்களில் ஆடியுள்ள திண்டுக்கல் அணி 1 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களது 2-வது வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

    • 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
    • விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.

    அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.

    2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

    • சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர்.
    • சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக சிவம் சிங் - அஸ்வின் களமிறங்கினர். சிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பாபா இந்திரஜித் - விமல் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விமல் குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர். அவர் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம் ஸ்பார்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

    எஸ் அபிஷிக், ஆர் கவின், முஹம்மது அட்னான் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், கே விஷால் வைத்யா, ஷிஜித் சந்திரன்(சி), சன்னி சந்து, ராஜேந்திரன் விவேக், எஸ் ஹரிஷ் குமார், எம் பொய்யாமொழி, என் செல்வ குமரன்

    திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):

    சிவம் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின்(கேட்ச்), விமல் குமார், பாபா இந்திரஜித்(வ), பூபதி குமார், சி சரத்குமார், எஸ்.தினேஷ் ராஜ், ஜி.கிஷூர், வருண் சக்ரவர்த்தி, பி.விக்னேஷ், வி.பி.திரன்

    ×