என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dmk councilors"
- வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள் என கமிஷனர் கூறினார்.
- தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மேயர் அறையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல மணி நேரம் இருந்து கொண்டு கமிஷன் பேசுகிறார்கள். அதனால் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என புகார் கூறி பேசினார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே கமிஷனர் தலையிட்டு வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள். பிற சம்பவங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச வேண்டாம் என அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.
மேலும் இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
வாக்குவாதம்
அப்போது 2 தரப்பு தி.மு.க. கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, பவுல்ராஜ், கோகுலவாணி சுரேஷ், முத்துலட்சுமி சண்முக பாண்டி, கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன், சந்திரசேகர், அனுராதா சங்கர பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
- முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயபிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னா் அ.தி.மு.க. உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, தி.மு.க. உறுப்பினா்கள் ரஹீம், இசக்கித்துரைபாண்டியன் ஆகியோர் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிடத்தில் நிரந்தர காங்கிரீட் மேற்கூரை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.
அதனைத்தொடா்ந்து தி.மு.க. உறுப்பினா் ரஹீம் தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனா். பின்னா் கூட்டம் முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. உறுப்பினா்கள் நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்