search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dogs are a nuisance"

    • வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.சி.கே நகர், ஹவுசிங் போர்டு, பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன.

    கூட்டமாக தெருக்களுக்குள் சுற்றித்திரி வதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த தெருநாய்கள் அனைத்து தெருக்களிலும் அலைந்து திரிவதால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக உள்ளது.

    காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது.சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களையும் விடாமல் துரத்துவதால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.

    பொது மக்களின் நலன் கருதி நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளை, மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்திச் செல்கிறது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை போக்க, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து காடுகளிலோ அல்லது யாரும் இல்லாத இடத்திலோ விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பேருராட்சி அலுவலகம் சுற்றி தற்போது வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறி வருகிறது.

    எனவே வாகனங்கள் நிறுத்த பேரூராட்சி சார்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குழந்தைகளை கடிப்பதாக குற்றச்சாட்டு
    • பொதுமக்கள் அச்சம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்களும் மற்றும் குழந்தைகளும் செல்லும்போது தெருநாய்கள் கடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வந்தவாசி காந்தி சாலை பஜார் சாலை சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×