என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drilling work"
- இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது.
- மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 70 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப் பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க 70 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.
47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளை போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.
அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று காலை வரை 22 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.
இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்க வாட்டில் கிடைமட்டமாக துளை போடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழு மையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.
இதுவரை ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொறுத்தப்பட்டு இருப்பதால் அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார்.
இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆட்கள் மூலம் துளைபோடும் பணியை செய்ய சுமார் 36 மணி நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலை பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.
- பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.
- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருகிறது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் 4 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயில் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது.
தற்போது உறை கிணறு களில் மிக குறைந்த அளவி லான நீர் மட்டுமே உள்ளது. இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதை யடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று முதல் உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் பார்வையி ட்டனர்.
பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்த ப்பட்டு வருவதாகவும், குடிநீர் வீணாகுவதை சேதமடைந்த குழாய்கள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.
- திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
- வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.
உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்படுகையான பொத்தனூர் குட்டுக்காடு பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் மது அருந்துவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக அப்பகுதிக்கு குளிக்கச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வராததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் காவிரியாற்றில் இருந்து முறைகேடாக மணலை மூட்டைகளாக கட்டி, மோட்டார்சைக்கிள்கள் மூலம் மணலை கடத்தி விற்பனை செய்வது அதிகரித்தது.
இந்த நிலையில், பரமத்திவேலூர் போலீசார் பொத்தனூர் காவிரியாறு பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதன்மூலம் காவிரி ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிளில் செல்லமுடியாத நிலை ஏற்படும்.
இதையும் மீறி முறைகேடாக மணல் எடுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ரோந்துப்பணிகள் தொடரும் எனவும் பரமத்திவேலூர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘ காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சென்று மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போது, மோட்டார் சைக்கிளில் தான் இந்த மணல் கடத்தல் பெரும்பாலும் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்குள் செல்வதை தடுக்க காவிரி ஆற்றின் படுகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதன் மூலம் இந்த மணல் கடத்தலை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்