search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver-conductor arrested"

    • மதுரை அருகே டாக்டரை உருட்டு கட்டையால் தாக்கிய மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.
    • தனியார் மினிபஸ் வேகமாக மோதுவது போல நின்றதை தட்டிக்கேட்டார்.

    மதுரை

    மதுரை தேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 31). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.

    நேற்று இரவு இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். குரு தியேட்டர் சிக்னல் முன்பு, தனியார் மினிபஸ் வேகமாக மோதுவது போல நின்றது. இதை டாக்டர் தினேஷ் பாபு தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த மினி பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் உருட்டு கட்டையால் டாக்டரை தாக்கி விட்டு தப்பினர்.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திலகர் திடல் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில் கரிமேடு இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். டாக்டர் தினேஷ் பாபுவை மினி பஸ் டிரைவர் அருண்குமார் உருட்டுக்கட்டையால் தாக்குவதும், கண்டக்டர் முனீஸ்வரன் மூக்கில் குத்துவதும் தெரிந்தது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது.
    • பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன்படி செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீசார் கடலாடிகுளம் கூட்ரோடு பகுதியில் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது. அந்த பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    உடனே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் அரூர்் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்டக்டர் முனுசாமி (47) என்பவரை கைது செய்தனர். 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் பஸ்சில் வந்த பயணிகளுக்கு மாற்று பஸ் மூலம் அவர்களை அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து டிரைவர்் கண்டக்டரிடம் இதை உங்களுக்கு யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

    ×