search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "'E-NAM' scheme"

    • திருப்பூர் மாவட்டத்தில்15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.
    • இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, சேவூர், பெதப்பம்பட்டி, மூலனூர்,அலங்கியம் உள்ளிட்ட 15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.அந்தந்த பகுதியில் விளையும் பயிர்களுக்கு ஏற்ப பருத்தி, நிலக் கடலை, தேங்காய், தேங்காய் பருப்பு, கொப்பரை என பல்வேறு விளைப்பொருட்கள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்படுகின்றன.அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறுகட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட அளவில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன. வருகிற ஏப்ரல் தொடங்கி அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இ-நாம் வர்த்தகத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள், தொழில்நுட்ப கட்டமைப்பு, பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இ-நாம் வர்த்தக முறையில் நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும். இடைத்தரகர் தலையீடு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரி விக்கின்ற னர்.சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பொறுத்தவரை நிலக்கடலை வர்த்தகம் பெருமளவில் நடக்கும். தற்போது கொப்பரை கொள்முதல் மேற்கொள்ள அனுமதி கேட்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    ×