என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "e-service centers"
- இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக் கவும் https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/. என்ற இணைய முகவரியை பயன்படுத்தலாம்.
விண்ணப்பங்களை இந்த விவரம் வெளியிடப்பட்ட நாள் முதல் வருகிற 30-ந் தேதி வரை பதிவு செய்ய லாம். கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்பு றத்திற்கு ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் அருகே உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை https://tnega.tn.gov.in/ இணைய தளத்தில் காண லாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
- அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
அரியலூர்,
இ-சேவை மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திட https://tnesevai.tn.gov.in/ அல்லது https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் வருகிற 30-ந்தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் என ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை "முகவரி" ஆண்ட்ராய்டு செல்போன் செயலியை பயன்படுத்தி காணலாம். அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை.
- கிராமம்தோறும் இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக 2016 முதல் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை. அதற்காக தொலைதூரத்தில் இருக்கும் இ-சேவை மையம் சென்றுவருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு இ-சேவை மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், கிராமம்தோறும், இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
- மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். அரசு கேபிள் டி.வி.வாரியம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், கிராம தொழில் முனைவோர் சார்பில் நடக்கும் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் இ-சேவை மையம் அதிகரித்து வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இ-சேவை மையத்தினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அனைத்து மையங்களிலும் இரண்டு திரைகளை கொண்ட கணினியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, இ-சேவை மையத்தினர் தட்டச்சு செய்யும்போது, அதை எதிர்புறம் உள்ள விண்ணப்பதாரர் பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்த முடியும். சான்றிதழுக்கான கட்டண பட்டியலை இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.
- வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
- அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்னணு நிறுவனம், அரசு கேபிள் டி.வி., நிறுவனம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இ - சேவை மையங்கள் நடத்தப்படுகி ன்றன.வருவாய்த்துறையில் மேற்கொள்ளும் அனைத்து விதமான பணிகளும் இம்மையங்களில் மேற்கொ ள்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படு கிறது. வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு தீர்வு காண படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்க ளையும் ஊக்குவிக்கும் வகையிலும், அனைத்து இணைய வழி சேவைகளும் பொதுமக்க ளின் இருப்பிட த்துக்கு அருகிலேயே கிடைக்கும் வகையிலும், அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பிரத்யேகமாக வலைதளம் உருவாக்கியி ருக்கிறது.இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in இணைய தளம் வாயிலாக ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கிராமப்பகுதிகளில் துவக்குவதற்கு ரூ.3,000, நகர பகுதியில் ரூ.6,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
பயனர் எண் மற்றும் கடவுச்சொல், விண்ணப்ப த்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என ஊரக வளர்ச்சி துறை தெரிவித்து ள்ளது. இதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகை பகுதிகளில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. தமிழக அரசால் பொதுமக்கள் எளிதில் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இ-சேவை மையங்களால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாகையில் இணையதள சேவை இயங்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது செல்போன் மற்றும் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதால் பி.எஸ்.என்.எல். சேவை மக்களுக்கு ஏதுவாக கிடைத்து வந்தது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் இணையதள சேவை சரிவர வேலை செய்யாததால் பொதுமக்கள் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமணம், பட்டா மாறுதல் உள்ளிட்ட 21 வகையான சான்றிதழ்கள் பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அனைத்து சேவை மையங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ-சேவை மையத்திற்கு இணையதள வசதியை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ-சேவை மையங்கள் 18-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EServiceCenter #MaintenanceService
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்