search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elected unopposed"

    • அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
    • போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் படேல் தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் மராட்டியத்தில் ஒரே ஒரு இடம் காலியானது.

    இந்த மேல்சபை எம்.பி. பதவிக்கு மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் சுனேத்ரா பவார் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மராட்டிய சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே தெரிவித்தார்.

    • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

    தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சி லர்கள் உள்பட 12 கவுன்சி லர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசி தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நடந்தது.

    அப்போது நரிக்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கவுன்சி லர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காளீஸ்வரி சமயவேலு நரிக்குடி ஒன்றிய சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு ஆகின்றனர். #Arunachal #BJPCandidate
    புதுடெல்லி:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதி முடிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதேபோன்று ஆயுள்காலம் முடிகிற சிக்கிம், ஒடிசா, ஆந்திரா மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது.

    60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில், ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள்.

    அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

    இதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் 2 பதிவுகள் வெளியிட்டார்.

    ஒரு பதிவில், “அருணாசல பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஆலோ கிழக்கு தொகுதியில் சர் கெண்டோ ஜினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், “அருணாசலபிரதேசத்தில் இருந்து மற்றொரு வெற்றியும் வந்திருக்கிறது. யாசூலி சட்டசபை தொகுதியில் எர் தபா தெதிர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

    2009 சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி தோர்ஜீ காண்டுவும் (காங்கிரஸ்), 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போட்டியின்றி தேர்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.
    ×