search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer student"

    வீட்டுக்குள் புகுந்து டிவி நடிகையை திருமணம் செய்வதாக கூறி மிரட்டல் விடுத்த என்ஜினீயரிங் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rithika
    போரூர்:

    பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

    இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.

    இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.

    இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Rithika
    மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவியை கடத்தியதாக காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவரது மகள் கிருத்திகா (30). என்ஜினீயரிங் மாணவியான கிருத்திகா. கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கிருத்திகாவை அவரது காதலன் நவீன்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் செந்தமிழ்செல்வன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி கிருத்திகா மற்றும் நவீன்குமாரை தேடி வருகிறார். #tamilnews
    நாகை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். இதுதெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் காதல் தகராறில் என்ஜீனியரிங் மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கெங்கி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் ஜானகிராம் (வயது 19). இவர் திருப்பதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். 2-வது ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் காஜீலு மாண்டியம் பகுதியை சேர்ந்த வம்சிராயல் (20) என்பவர் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் கிரிக்கெட் விளையாட அழைப்பதாக தன் தாயிடம் கூறிவிட்டு ஜானகிராம் சென்றார். காஜீலு மாண்டியம் விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் ஜானகிராம் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அங்கு வம்சிராயல் தனது நண்பர்கள் 7 பேருடன் குடி போதையில் வந்து ஜானகி ராமிடம் தகராறு செய்தார். அப்போது வம்சிராயல் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து வைத்திருந்த கத்தியால் ஜானகிராமை பயங்கரமாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜானகிராம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். #tamilnews
    10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர் மீது தாய் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரத்தைச் சேர்ந்த பெண், கன்னியாகுரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.

    இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் தாயின் பராமரிப்பிலும், மகன் தந்தை பராமரிப்பிலும் இருந்து வருகிறார்கள். மகள் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மாணவி மாயமான அதே நாளில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். இதனால் அவர் தான் மாணவியை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 21-ந் தேதிபள்ளிக்கு சென்ற எனது மகள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பள்ளிக் கூடத்துக்கு சென்றேன். ஆனால் அவள் பள்ளிக்கு வரவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது மகள் மாயமான சமயத்தில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் என்ஜினீயரிங் மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். அந்த மாணவர் எனது மகளுடன் பழகி வந்துள்ளார். அவர் தான் எனது மகளை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். எனவே அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் என்ஜினீயரிங் மாணவரை தேடி வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் மாணவருக்கு 16 வயது ஆகிறது. மாயமான 2 பேரும் மைனர் என்பதால் அவர்கள் 2 பேரையும் மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×