என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "environmental protection"
- தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
- ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.
தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.
இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொற்றுநோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியம் ஆகும்.
சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கிவிடும்.
நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கிற குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும். வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம்.
சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் தொடர்பானதாகும். ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ணவேண்டும். சாப்பிடும்போதும் உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகும், சுகாதார வளாகத்தை பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
குழந்தைகளிடம் கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்தி கழுவுவதற்கு கற்று கொடுக்க வேண்டும். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
நம் உடல்நலத்தில் நாம் உடுத்தும் ஆடைகளுக்கு பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாக துவைத்த ஆடைகளை அணியவேண்டும். உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்க வேண்டும்.
உணவு தயாரிப்பதற்கு முன்பும், உணவுப்பொருட்களை தொடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும். கடைகளில் சாப்பிட நேரும்போது தரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு விளக்கி கூறவேண்டும். ஆரோக்கியமான வாழ்வை வாழ அனைவரும் கற்று கொள்வோம்.
- சாயக்கழிவு வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்.
- பைபர் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.
திருப்பூர் :
சர்வதேச சந்தைகளில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. சீனா, வியட்நாம், கம்போடியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியின் வாயி லாக முன்னோடியாக இருக்கின்றனர்.
தரமான பருத்தி நூலி ழையில் இருந்து ஆயத்த ஆடை தயாரிப்பதில் இந்தியா மட்டுமே தனித்துவம் பெற்ற நாடாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை காட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலோங்கி யுள்ளது. இதன்கார ணமாக நீடித்த நிலையான சுற்றுச்சூ ழல் பாதிப்பையே விரும்புகின்றனர்.
எத்தகைய உற்பத்தி தொழிலாக இருந்தாலும் இயற்கை சார் உற்பத்தியாக இருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாகவும் இருக்கிறது. சாயக்கழிவு வெளியேற்றத்தை கட்டு ப்படுத்திய ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி, கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது,
சமுதாயத்தில் நிரம்பி யுள்ள கார்பன் -டை -ஆக்ஸைடை கிரகித்து, நன்மை செய்யும் மரம் வளர்ப்பு, 'பெட் பாட்டில்'களில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிப்பு, பனியன் உற்பத்தியின் போது கழிக்கப்படும், துணிகழிவை மீண்டும் நூலாக மாற்றி, துணியாகவும், ஆடை யாகவும் மாற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இயற்கை அரணாக கருதப்படும் சாதனைகளை திருப்பூர் நிகழ்த்திக்கொ ண்டிருக்கிறது.
ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில், கடந்தாண்டு நடத்திய கருத்துக்கேட்பில் 48 சதவீத மக்கள் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை விரும்பு கின்றனர். சுற்றுச்சூழல் சார்ந்த உற்பத்திக்காக 69 சதவீத மக்கள் கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். அவர்களில் 4 சதவீதம் பேர், 20 சதவீதம் வரையிலான கூடுதல் விலை கொடுக்கவும் இசைவு தெரிவித்துள்ளனர்.
இயற்கை சார் ஆடை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு, கப்பலில் வர தாமதம் ஏற்பட்டால் காத்திருந்து பெற்றுக்கொள்வதாக 48 சதவீதம் பேர் சம்மதி த்துள்ளனர். கப்பலில் வரும் சரக்கை விமானத்தில் அனுப்பினாலும், அதற்கான கூடுதல் விலையை ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். பாரம்பரிய கடை நடத்துவோர் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கும் ஆடையை பெரிதும் மதி ப்பதாகவும், ஒரு ஆடையை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பழக்கம் மாறி பலமுறை உபயோகிக்கவும் பழகிவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கருத்துக்கேட்பு அறிக்கை முடிவுகள் அனைத்தும் திருப்பூர் பின்னலாடை மற்றும் செயற்கை நூலிழை ஆடை வர்த்தகத்துக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகியுள்ள தையே காட்டுவதாக தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களில் இருந்து வடமாநிலங்களில் பாலியஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் பாலியஸ்டர் நூல் மற்றும் பாலியஸ்டர் பேப்ரிக் உற்பத்தி அதிகம் நடக்கிறது.வடமாநிலங்களில் உற்பத்தி யாகும் பேப்ரிக் அதிக அளவு திருப்பூருக்கு வந்து சேர்கிறது. திருப்பூ ரில் இயங்கி வரும் பின்ன லாடை நிறுவனங்கள், குறைந்த உற்பத்தி செலவில் பாலியஸ்டர் பின்ன லாடைகளை வகை வகையாக வடி வமைத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. பாலியஸ்டர் பின்ன லாடைகளின் ஆயுட்கா லம் அதிகம், பராமரிப்பதும், சலவை செய்வதும் எளிது என்பதால், வாடிக்கை யாளரும் அதிகம் விரும்பி அணிய துவங்கி விட்டனர். தற்போதைய நிலவரப்படி ஆண் மற்றும் பெண்கள் உள்ளாடைகள், நீச்சல் உடைகள், விளையாட்டு ஆடைகள், இரவுநேர ஆடைகள், ஆக்டிவ் உடைகள் என அனைத்து வகையான ஆடைகளும் பாலியஸ்டர் துணியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
வடமாநிலங்களில் இருந்து வரும் சாய மேற்றிய பாலியஸ்டர் பேப்ரிக் துணியை வாங்கி உடனுக்குடன் ஆடை களாக வடிவமைத்து சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். உள்நாட்டு சந்தைகளை பாலியஸ்டர் பின்ன லாடைகள் ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன. இதுகுறித்து யெஸ் இந்தியா கேன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் கூறியதாவது:- மொத்த தேவையில் 10 சதவீதத்துக்கும் குறைவாக மட்டும் பாலியஸ்டர் பேப்ரிக் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக பேப்ரிக் வாங்குவதால் நூல் விலை குறித்து கவலையில்லை. தற்போதைய நிலவரப்படி ஸ்பன் மற்றும் பிளமென்ட் ரக பாலியஸ்டர் நூல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், திருப்பூரின் பாலியஸ்டர் ஆடை உற்பத்தியும் விற்ப னையும், 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக உறிஞ்சும் தன்மையுள்ள ஆடைகள் உற்பத்தி செய்த பிறகு பாலியஸ்டர் மீதான இமேஜ் அதிகரித்துள்ளது. இனியும் பாலியஸ்டர் ஆடைக்கு மாறாவிட்டால் பனியன் தொழிலில் ஓரம்கட்டப்படும் நிலை உருவாகும்.
தற்போதைய நிலவரப்படி டில்லி மார்க்கெட்டில் இருப்பதை காட்டிலும் திருப்பூரில் விலை குறை வாக விற்கப்படுகிறது. சாதா ரணமாக 95 ரூபாயில் இருந்தே ஆடைகள் கிடைக்கி ன்றன. பருத்தி துணியைவிட உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ள பேப்ரிக் ரகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் உற்பத்தி செலவு அதிகமாகும் என்பதால் சாயமேற்றப்பட்ட பேப்ரிக் ,வடமாநிலத்தில் இருந்து வாங்குகிறோம். தற்போது கிலோ 170 ரூபாய்க்கு சாயமிடப்பட்ட பேப்ரிக் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறி னார்.
நூற்பாலை உரிமை யாளர்கள் கூறுகையில், பாலியஸ்டர் நூல் விலை தினமும் மாறுபடும். ஒரே நாளில் 3 முறை கூட மாறுபடுகிறது. பைபர் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நூல் விலையில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. ஸ்பன் பாலியஸ்டர், 30ம் நம்பர் கிலோ 148 ரூபாய், 40 ம் நம்பர் 158 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளமென்ட் ரகத்தில், 75 'டெனைர்' நூல் கிலோ 125 ரூபாய்க்கும், 150 டெனைர் , 118 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாலியஸ்டர் நூல் விலை எவ்வகையிலும் பாதிக்காது. வடமாநிலத்தில் மட்டுமே பாலியஸ்டர் பேப்ரிக் உற்பத்தியாகிறது என்றனர்.
இந்தநிலையில் ஒருங்கி ணைந்த ஜவுளிக் கொள்கை தயாரிக்க திருப்பூர் ஜவுளி த்தொழில் அமைப்பு களுடன் தமிழக அரசு ஆலோ சனை நடத்தியுள்ளது.புதிய ஒருங்கிணைந்த ஜவுளி க்கொள்கையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொ டர்பாக திருப்பூ ரில் ஜவுளி தொழில் அமைப்புகளின் பிரதிநிதி களுடன், கடந்த 5ந் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரசாத் யாதவ் முன்னிலையில் கமிஷனர் வள்ளலார் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. தொழிலாளர் குடியிருப்பு வசதி, காலாண்டு 'ஓவர்டைம்' நேர நிர்ணயத்தில் சலுகை, திறன் வளர்ப்பு பயிற்சி, தொழிலாளருக்கான போக்கு வரத்து வசதி, வங்கிகளின் பேசல் - திட்ட குளறுபடியை தீர்ப்பது, சாய ஆலைகளுக்கு 75 சதவீத மின்கட்டண சலுகை, மத்திய, மாநில அரசு சலுகைகள் பெறும் விதிமுறையில் தளர்வு அளிப்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து ள்ளோம் என்றார்.
அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்