search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination results"

    • தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
    • தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பலர் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்க இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மறுகூட்டல்

    இந்த தேர்வுக்கான மறுகூட்டலுக்கு வருகிற 25, 26-ந்தேதிகளில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் முடிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    சென்னை:

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இம்மாதம் பல்வேறு தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளன.

    முதல் கட்டமாக, 12ம் வகுப்புபொதுத் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

    மேற்கண்ட மூன்று பொதுத் தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 27,72,384 மாணவர்கள் தேர்வெழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

    மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மனசோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளன்றுபெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மனசோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.



    அதேபோல், தன்னுடன் பயிலும் சக மாணவர்களில் எவரேனும் ஒருவர் மதிப்பெண் குறையும் என்ற மனசோர்வில் இருந்தால் சகமாணவர்கள் தன்னம்பிக்கை யூட்டி மனசோர்விலிருந்து வெளிக்கொணரவேண்டும்.

    தமிழகத்தைப் பொறுத்த வரையில், அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர் காலத்தை அரசு உருவாக்கி வருகிறது.

    எனவே, பெற்றோர்களும், மாணவ கண்மனிகளும், ஆசிரியபெருந்தகைகளும், ஊடகத் துறையைச் சேர்ந்த அனைத்துநண்பர்களும் சேர்ந்து தேர்வுமுடிவுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் பணியினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.#Exam #Result #Plus2 #TamilNadu #minister #sengottaiyan
    ×