search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive engineer"

    • சமயநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட எழுமலை ேக.வி. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 11 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எருமார்பட்டி, கீழமாத்தூர் பீடரில் நாகமலைப்புதுக்கோட்டை, கீழமாத்தூர் பஞ்சாயத்து, நான்கு வழிச்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல நாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவராக இருப்பவர் தமிழ்வேல். இவர் சங்கத்தின் மூலம் டெண்டர் எடுத்து அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளார். இப்பணி முடிவடைந்ததை அடுத்து அதற்கான தொகையை அரியலூர் செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் அவர் கேட்டுள்ளார். 

    அப்போது அந்த தொகையை வழங்குவதற்கு செயற்பொறியாளர் மணிமாறன் ரூ.18ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக மணிமாறனின் கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.18 ஆயிரத்தை மருதையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த மணிமாறனிடம் தமிழ்வேல் கொடுத்துள்ளார். அதனை மணிமாறன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் மணிமாறன் மட்டும் டிரைவர் சக்திவேல் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். 

    பின்னர் அவர்களை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்,2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
    ×