என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "family cardholders"
- குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமையான நாளை (10-ந் தேதி) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனுச் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
- காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
தமிழக அரசின் உத்தரவின் படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சிமுறையில் பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உ ள்ளது.
ராமநாதபுரம் தாலுகா-தேர்போகி ரேஷன் கடை, ராமேசுவரம் தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம், திருவாடானை தாலுகா-கீழ்பனையூர்ரேஷன்கடை, பரமக்குடி தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை, முதுகுளத்தூ ர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம், கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம், கமுதி தாலுகா- து. வாலசுப்பிர மணியபுரம்ரேஷன்கடை, கீழக் கரை தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம்,
ஆர்.எஸ். மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
இந்த கிராமங்களை சேர்த்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் ரேஷன் கடை களில் பொருள்பெறவருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல் பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்