search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer home robbery"

    பவானியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் 32 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த சீதபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). விவசாயி. தேவராஜ் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவு திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தேவராஜின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 32 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார்.

    இன்று காலை கண் விழித்து பார்த்த தேவராஜ் பீரோ திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தேவராஜ் பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 48) விவசாயி, கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

    நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த 2பவுன் நகை பணம் 2 ஆயிரம் மற்றும் ஒரு கம்ப்பூட்டர் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து உள்ளனர்.

    வீடு பூட்டி கிடப்பதை கண்டு நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    நன்னிலத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கருணா மூர்த்தி (வயது 67). விவசாயி. இவர் கடந்த 10-ந்தேதி குடும்பத்துடன் புறப்பட்டு திருவையாறில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகை, வீட்டில் இருந்து வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

    இதைத் தொடர்ந்து கருணாமூர்த்தி நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×