என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmers meeting"
- விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
- தவணைத் தொகையினை பெறுவதற்கு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மே 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே. விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல். புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.
எனவே விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இத்தகவலை கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மைதுறை சம்மந்தபட்ட குறைகளை விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மனுவாகாவோ தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் விசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சங்கர் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை ஆய்வாளர் நாகராஜன், துணை தாசில்தார் முருகு, விவசாய சங்கத்தலைவர் ராஜன், செயலாளர் ஒளிச்சந்திரன், புலவர் மன்றம் கந்தசாமி, முன்னோடி விவசாயி மணியன், காவேரி தமிழ்தேச விவசாய சங்கத்தைச் சேர்நத சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், மற்றும் வேளாண்மைத்துறையினர், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் காவிரியில் கடைமடை பாசன பகுதியான ஆதனூர், கருப்பம்புலம், கடினல்வயல், கைலவனம்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் மின் இறவை பாசனத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கோவில்தாவில் உள்ள சட்ரஸ் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதை சரிசெய்ய நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்த சட்ரஸை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.
வண்டுவாஞ்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான 144 ஏக்கர் நிலத்தை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2013-14-ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்ததையொட்டி விவசாயிகள் தாலுக்கா அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Farmersmeeting
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்