என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Farmers rally"
- இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
ரேசன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.
போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.
- இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.
- டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.
பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி, காங்கிரஸ் விவசாய அணி செல்லகணபதி, தி.மு.க. செந்தில்குமார், மற்றும் ராமமூர்த்தி, சங்கர், புருஷோத்தமன், சாந்தகுமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பேரணி அண்ணாசாலை, நேருவீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்குகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.
விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணிக்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.
இதில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன் மற்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் பெண்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணைகட்ட முயற்சிப்பதை கண்டித்தும், இதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடக அரசை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் ஏந்திய படி சென்றனர்.
காவிரி படுகையை பாலை வனமாக்ககூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட திட்டங்களை கைவிட கோரியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
பிறகு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தஞ்சை தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.
விவசாயிகளின் இந்த பேரணியையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இரண்டாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் தொடக்கமாக சர்வதேச அகிம்சை தினமான இன்று டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது இந்த பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.
அவர்களின் கோரிக்கைகள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். #Farmersrally #RahulGandhi
உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம் - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசாரின் நடவடிக்கைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்