என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Fisherman killed"
தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா (வயது61), மீனவர். இவர் கடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்று வலை விரித்து மீன் பிடிப்பது வழக்கம்.
நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற சாத்தையா காலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நம்புதாளையில் முருகன் கோவில் காலனி அருகே கடற்கரையில் ஆண் உடல் ஒதுங்கி கிடப்பதாக தொண்டி மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கரையில் ஒதுங்கிய உடல் சாத்தையா என தெரிய வந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தையாவுக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்களும் உள்ளனர்.
குளச்சல் கோடிமுனை சைமன் காலனி பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 59). மீனவர்.
இவர் கடந்த 3-ந்தேதி குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்ற காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.
அந்த பாட்டிலில் காருக்கான பெட்ரோல் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் இருந்த பெட்ரோலை குடித்தார். இதில் அவர் மயங்கி கிழே விழுந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டென்னிஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). மீனவர் இவருடைய முதல் மனைவி மல்லிகா 2004- ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஆறுமுகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக செல்வி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஆறுமுகத்துக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நோயால் அவதிப்படும் உனக்கு என்னால் அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய முடியாது என கூறி செல்வியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் உயிருக்கு போராடிய செல்வியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மனைவியின் காதில் விஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.