search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood In Courtrallam Falls"

    குற்றாலம் அருவிகளில் இன்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #CourtallamFalls
    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் அவ்வப்போது பெய்யும் கன மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளம் சீறிப்பாய்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மலைப்பகுதியில் நேற்று இரவு மழை குறைந்த நிலையில் அதிகாலையில் இருந்து மீண்டும் மழை கொட்ட தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள தடாகம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது.

    புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் வெள்ளத்தால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    கன மழை காரணமாக குற்றாலம் சிற்றாற்றிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்றில் உள்ள 17 தடுப்பணைகளும் நிரம்பி கால்வாய்களிலும் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கரையோரபகுதி மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #CourtallamFalls

    ×