search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for pregnant women"

    • கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது.
    • வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் செயல்படுத்தி வரும் 'அன்னசுரபி' திட்டத்தின் கீழ் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர். தொடர்ந்து வாரம் இருமுறை பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அன்னசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுமென அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.

    • சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.
    • மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சமூகநலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமை ச்சர் முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 111 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், 45-வது வார்டு கவுன்சிலர் பிரவீனா சந்திரசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேயர் நாகரத்தினம் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

    ×