என் மலர்
நீங்கள் தேடியது "Forest Department Alert"
- பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
- விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.
இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பச்சை கிளிகளை வேட்டையாடி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள் நிறைந்த தோப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பச்சை கிளிகள் வசித்து வருகின்றன. தற்போது அவகைளை பார்ப்பது அரிதாகி விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கிளிகளை அரிய வகை பறவைகள் பட்டியலில் இணைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.
இந்த வகை கிளிகளை வேட்டையாடுவதில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிடிக்கப்படும் கிளிகளை ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கிளிகளுக்கு பேசும் திறன் இருப்பதால் வீடுகள், நிறுவனங்களில் பச்சை கிளியை விரும்பி வளர்க்கின்றனர். இவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை பறிமுதல் செய்து வனத்தில் விட ணே்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, இந்திய வனச்சட்டப்படி மைனா, பச்சை கிளிகள் விற்பது, வீடு, கடைகளில் வளர்க்க தடை உள்ளது.
குறிப்பாக பறவைகளை விற்பனை செய்ய முறைப்படி வனத்துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். சோதனையின்போது பிடிப்பட்டால் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பச்சை கிளிகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.