என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Forest department surveillance"
- நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்jது.
- மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
நெல்லை:
நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டதாக கிடைத்த தகவலையடுத்து நெல்லை வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
வீடுகளிலேயே முடங்கிய மக்கள்
நாங்குநேரி பெரியகுளத்தின் கரை, மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாழை வயல்களுக்குள் கரடியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கரடியை பிடிக்க 2 கூண்டுகள் வரவழைத்து அதனை 2 இடங்களில் வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
போக்குகாட்டும் கரடி
4-வது நாளாக இன்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரடிக்கு பிடித்தமான பழ வகைகளை கூண்டில் வைத்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால் கரடி கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
இந்நிலையில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கரடியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று வனத்துறை அதிகாரிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் பகுதியில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் புதூர் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் கரடியை பிடித்து விடுவோம்." என்றனர்
- பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காங்கயம் :
திருப்பூர் காங்கயம் ஊதியூர் பகுதியில் கடந்த மாதம், 3ந் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை பிடிபடவில்லை. இந்நிலையில் கலெக்டர் வினீத், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காங்கயம் ஆய்வு மாளிகையில் நடந்தது. அதன்பின் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:- பொதுமக்கள் கூறிய பகுதிகளில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால் தடத்தின் அளவுகளை வைத்து சுற்றித்திரிவது 6 முதல் 7 வயதுடைய சிறுத்தை. அதனை பிடிக்க நான்கு கூண்டுகள் வைக்கப்பட்டு ள்ளது. 2 ட்ரோன் கேமரா வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம், கபில்மலை இருகூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. அங்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரூர் அத்திக்காடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் வந்தது.
அங்கும் கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் தற்போது திருப்பூர், காங்கயம் ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வரத்து உள்ள பகுதியில் தான் சிறுத்தை நடமாடும். இரையை தேடி நகரும் சிறுத்தை திரும்ப, திரும்ப வனப்பகுதிக்கே சென்று விடும். இதுவரை மனிதர்களை தாக்கவில்லை.சிறுத்தையால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். வனத்துறை சார்பில் 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும், 3 பழங்குடியின மக்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும், அல்லது வனப்பகுதிக்கு விரட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வை க்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்