search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free camp"

    • தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைபற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இந்த செயல் விளக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதனை செயல் விளக்கமாக செய்து காண்பிக்க அறிவுறுத்தினார்.

    அதன்படி ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையினை கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், முருநெல்லிக்கோட்டை, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது .

    இந்த செயல் விளக்க நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பால்ராஜ், முத்துச்சாமி, சந்திரகலா, வெள்ளை சாமி, ராஜி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு ,அருண்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி அருகே கருவலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூா் ஏங்கா், கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அமைப்பு, திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கருவலூா் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ஆறுமுகம், மன்ற உறுப்பினா் வாணி மகேஷ்வரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இந்த முகாமை கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அறக்கட்டளை நிா்வாகிகள் கபில்தேவ், அருள்குமாா், செல்வம், முத்துசாமி, பாலசந்திரன், மணி, கோபிநாத், சந்தோஷ்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் சார்பில் ஒஸ்.பீஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மாநில பொது செயலாளர்கள் தனுசு, திருமுருகன், இளையராஜா, வட்டார தலைவர் ஜெரால்டு, நிர்வாகிகள் மருதுபாண்டியன், சார்லஸ், ராஜ்குமார், தியாகராஜன், பிரதீஷ் இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×