என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free housing"
- 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
- 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை
- போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் .எஸ் .சில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் 195 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகவே ஊத்துக்குளி ஒன்றிய வருவாய் துறையை கண்டித்து தற்போது காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் சிபிஐ. புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஜி.ரவி, சிபிஐ. மாவட்ட செயலாளர் பி. பழனிசாமி,சிபிஐ தாலுகா செயலாளர் வி. எஸ்.சரவணன்,மாவட்ட செயலாளர் சின்னசாமி, தாலுகா முன்னாள் செயலாளர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் பி.எஸ். செல்வி, ஆர். சுப்புலட்சுமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ .ஐ. டி. யு .சி. மாவட்ட தலைவர் எம். மோகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் செய்திருந்தது.
- கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டம்.
- கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா்.
நாமக்கல்:
தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சாா்பில், நாமக்கல் நகரப் பகுதிகளில், கிராமப்புற பகுதிகளில் உள்ள நிலம் இல்லாதோருக்கு வீட்டுமனை வழங்கக் கோரி பல மாதங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருகிறது. 700-க்கும் மேற்பட்டோா் வழங்கியதில் இதுவரை ஒருவருக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் நேற்று நாமக்கல், பூங்கா சாலையில் தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் மாநிலத்தலைவர் ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நின்று கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டி.எஸ்.பி. சுரேஷ் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா அயன்பேரையூர் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து இலவச வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் 5 பேரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அழகிரிசாமியிடம் ஒரு மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
ஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொடுத்த மனுவில், கூத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கறவை மாட்டு கடனாக 20 நபருக்கு தலா ரூ.90 ஆயிரம் வழங்க கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு அனுமதியளித்தது. அதில் தலா ரூ.45 ஆயிரம் வீதம் 20 பேருக்கு வழங்கப்பட்டது. இதற்கு பங்குதொகையாக எங்களிடம் தலா ரூ.9 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் ஒரு தவணை கறவை மாட்டு கடனை கொடுத்து விட்டு 20 மாதம் ஆகியும், அடுத்த தவணை கறவை மாட்டு கடனை வழங்கவில்லை. ஆனால் பால் பண்ணையில் எங்களுக்கு 2 தவணை மாட்டு கடன் வழங்கியதாக கூறி, ஒரே மாதத்தில் ரூ.3 ஆயிரம் வீதம் பிடித்து செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா கோருதல் உள்பட 367 மனுக்களை கலெக்டர் அழகிரிசாமியிடம் பொது மக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் கடந்த ஜூலை மாதம் சென்னை, பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவர் மோதி படுகாயமடைந்த குன்னம் தாலுகா, லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த முகமதுயாசருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். அப்போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்