என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fruit plants"
- விவசாயிகளுக்கு 5 வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
- தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி:
கடையம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மா, நெல்லி,எலுமிச்சை, சீதாப்பழம், மாதுளை போன்ற 5வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு பழச் செடிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின்போது தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். இதில் தோட்டக்கலை அறிவியல் விஞ்ஞானி இளவரசன், துப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மற்றும் முன்னோடி விவசாயிகளான ஏழுமலை, உலகநாதன், முத்துக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலைகுமார், பார்த்தீபன், பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.
- கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
- விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் மா,பலா, கொய்யா,எலுமிச்சை, நெல்லி,சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செடிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினை அணுகி பயன்பெறலாம் என்று கபிலர்மலை தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.
- அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
- விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் ஊடு பயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், வாழை மற்றும் மரவள்ளியில் ஊடுபயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
தோட்டக்கலை உபகரணங்களை நெகிழிக்கூடைகள் 40 சதவீத மானிய விலையில் 80 அலகு வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்ட தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் தொகுப்பு ரூ.450-க்கு 250 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பழச்செடி தொகுப்புகள் மற்றும் மாடித்தோட்ட தொகுப்புகள் திட்டத்–தில் பயன்–பெற www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், மற்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்