என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fullmoon Pooja"
- காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.
- பூஜையில் மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.
சிறப்பு பாலாபிஷேகம்
தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிமாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 18 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
- சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அருகே ஓம் ஸ்ரீபழனிவேல் முருகன் ஆலயம் பிரசித்தி பெற்ற திருத்தலமாக உருவெடுத்து வருகிறது.
இந்த ஆலயம் சேரன்மகாதேவி- களக்காடு சாலை மார்க்கத்தில் புலவன் குடியிருப்பு அரசன் நகரில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீபிங்களஷேன கால பைரவர் காமாட்சி அம்பாள் சமேத வெள்ளிமலை நாதர் சன்னதி அமைந்துள்ளது. சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்து பூஜை கைங்கேரியங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலை முருகனடியார் கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் பிரார்த்தனைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறி வருவதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
- அம்மனுக்கு தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.
- முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந் தோறும் (புரட்டாசி மாதம்) நடை பெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற் பொழிவாற்றினார். 6.30 மணியளவில் முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும், குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெ ட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடை பெற்றது. அதன் பிறகு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் படித்து திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்