search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja confiscated"

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி ஜெயா(45).

    இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக ரோந்து சென்ற பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி இருவரையும் பிடித்து விசாரித்தார்.

    அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் தேனியில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த 4 வருடங்களாக கோவை ஒத்தகால் மண்டபம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    முருகன் மீது பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் இருக்கிறது. இவர் கடந்த சில நாட்களாக பீளமேடு பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததாக போலீசார் கூறினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காட்டூர் போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற போது பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள கழிப்பிடம் அருகே முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்த போது 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் புதுசித்தாபுதூரை சேர்ந்த பன்னீர்செல்வம்(69) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.1280 -ஐ பறிமுதல் செய்தனர். #tamilnews
    தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் போதை கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு களியக்காவிளை பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அவர்கள் குமாரகோவில் சந்திப்பு பகுதியில் வரும் போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக தகவல்களை கூறினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஆதித்யன் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் சோதனை செய்த போது, அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்து தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் வைத்திருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆதித்யன் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தொடர்ந்து போலீசார் மாணவரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கியது? யார்-யாருக்கு விற்பனை செய்யப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×