என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Garbage fire"
- மேலூர் அருகே குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதமானது.
- குப்பைக்கு தீ வைத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது37), கூலித்தொழி லாளி. இவரது வீட்டருகே சிலர் குப்பைகளை குவித்து வைத்து தீ வைத்தனர்.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள ஜெயராஜின் குடிசை வீட்டுக்கு பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமை யில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதிலும் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
- நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் இடுவாய்,திருப்பூர்,வேலம்பாளையம் செல்லும் ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு உள்ளது.இந்த நால்ரோடு சந்திப்பில் ரோட்டோரங்களில் சிலர் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நால்ரோடு சந்திப்பில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் குப்பைகளை வீசி செல்வதாக அந்தப்பகுதியினர் கூறுகின்றனர்.மேலும் சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர்.
இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.எனவே அதிகாரிகள் இங்கு குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தியாகதுருகம் அருகே குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி எரிந்ததால் பெண் பலியானார்.
- புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி வசந்தி (வயது 33) இந்நிலையில் வசந்தி தனது குழந்தைகளுடன் சுப்ரமணியபுரத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வசந்தி வீட்டின் பின்புறம் தோட்டத்தில் உள்ள குப்பைகளை தீயிட்டு எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்தியின் சேலையில் தீப்பற்றி எரிந்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தி இறந்து போனார்.
இது குறித்து வசந்தியின் தாய் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்