search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Geographic Index"

    • தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
    • இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.

    இந்த கண்காட்சி நாளை வரை (21-ந் தேதி) நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு ள்ளார்.

    மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்து வருகிறோம்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பாரம்பரிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×