search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl sacrifice"

    • நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
    • பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவர வடக்கு பாகம் பரசேரி தேக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன். இவரது மனைவி ஜிகி. இவர்களது மகள் சேத்ரா (வயது 5).

    கொல்லம் சாவாராவில் உள்ள பிரசித்தி பெற்ற கொட்டாங்குளங்கரா கோவிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரமேசன் தனது குடும்பத்தினருடன் விழாவுக்குச் சென்றிருந்தார்.

    விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தின் போது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு சென்ற சேத்ரா, எதிர்பாராதவிதமாக தேர் சக்கரத்தின் அடியில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை சேத்ரா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சஞ்சனா ஒரு தனியார் பள்ளி படித்து வந்தார்.
    • பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி டேம் காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மனைவி மலர். இவர்களுக்கு சத்தியா (வயது 10) சஞ்சனா( வயது 4 )என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி படித்து வந்தனர்.இதில் சஞ்சனா எல்.கே.ஜி.படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது பள்ளியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன சஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார்.
    • உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    விழுப்புரம்:

    சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தியை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடு வதற்காக குடும்பத்துடன் ஆரோவில் வந்தார். அப்போது வானூர் அருகே பூத்துறையில் விடுதி எடுத்து தங்கினார். நேற்று தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார். அப்போது பரந்தாமணின் மகள் சஹானா (வயது 6). திடீரென மாயமானாள்.

    அதிர்ச்சியடைந்த பரந்தா மன் தனது மகளை விடுதி யில் தேடினார். அப்போது அவரது மகள் சஹானா அங்குள்ள நீச்சல் குளத்தில் மிதந்தார். பதறிபோன அவர் உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஹானா இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×