என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கோவில் திருவிழாவில் நெரிசல்: தேர் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பலி
- நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
- பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவர வடக்கு பாகம் பரசேரி தேக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன். இவரது மனைவி ஜிகி. இவர்களது மகள் சேத்ரா (வயது 5).
கொல்லம் சாவாராவில் உள்ள பிரசித்தி பெற்ற கொட்டாங்குளங்கரா கோவிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரமேசன் தனது குடும்பத்தினருடன் விழாவுக்குச் சென்றிருந்தார்.
விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு சென்ற சேத்ரா, எதிர்பாராதவிதமாக தேர் சக்கரத்தின் அடியில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை சேத்ரா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.