search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gokula Indira"

    • பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
    • இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. பா.ம.க.வுடன் சில கட்ட பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான். யார் வந்தாலும் வராவிட்டாலும் தனித்து நிற்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்.


    பல்வேறு சவால்களை திறம்பட கையாண்டு வந்துள்ளோம். எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. துணிச்சலாக எதிர் கொள்ளும். கட்சிக்கே தொடர்பில்லாத சூர்யமூர்த்தி இரட்டை இலை குறித்து வழக்கு போட்டுள்ளார். சூரிய மூர்த்தியை பின்னால் இருந்து யாரோ தூண்டி விடுகிறார்கள்.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ். கனவு பலிக்காது. சி.ஏ.ஏ. விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்து பொய் கூறி வருகிறது.



    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்தது என்ற மாயையை உருவக்க முயற்சி நடக்கிறது. அது எடுபடாது. தமிழ்நாட்டில் மக்களுடன் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணிதான் மெகா கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம்.
    • சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அ.தி.மு.க. அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி. உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.


    நாங்கள் ஒரு தாம்பாளத்தில் 2 கோடி தொண்டர்களை வைத்துள்ளோம். உங்களிடம் போய் அடிமை சாசனம் வாசிக்க தேவையில்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தாராம் பத்து தொகுதி எங்களிடம் கொடுத்து விடுங்கள். 10 தொகுதி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறோம் என தெரிவித்தாராம்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இ.பி.எஸ். மட்டுமே அமித்ஷா இல்லை. எதிரி மற்றும் துரோகிகளை சமாளித்து மத்தியில் இருக்க கூடியவர்களின் மிரட்டல்களை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார். #GokulaIndira
    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.

    சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira


    அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் கனவு பலிக்காது என்று பெரம்பூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார். #GokulaIndira #ADMK
    அம்பத்தூர்:

    வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதி 70-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயஸ்ரீமகேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் பெரம்பூர் ஆர்.மகேஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் இரா.வீரமணி முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரம்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தார்மீக உரிமை அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு.

    முதல்-அமைச்சர் பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின் முதல்வர் மடியில் கனம் இல்லாததால் தான் ஊழல் தடுப்பு பிரிவை ஸ்டாலின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்க சொல்கிறார். அண்ணா சொன்னது போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அ.தி.மு.க.வினர் எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் சட்டபடி சந்திப்போம்.

    அம்மா அவர்கள் உயிரை கொடுத்து ஏற்படுத்தி விட்டுசென்ற ஆட்சியை கழகத்தை அழிக்க தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அம்மாவின் கழகத்தை அழிக்க நினைக்கும் டி.டி.வி.தினகரன் கனவு ஒரு காலமும் பலிக்காது. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். என்ற இரு துருவங்களை கொண்டு வெற்றி மேல் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் டி.ஜி.வெங்கடஷ்பாபு எம்.பி., தலைமை கழக பேச்சாளர்கள் கோவிந்தசாமி, பி.எம்.மூர்த்தி எம்.குமார், நிர்வாகிகள் ரவிந்திரஜெயின், புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.கோபால், புரசை சீனிவாசன், மைதிலி, வி.எம்.ஜி.முகுந்தன், இளைய கிருஷ்னன், எம்.பி.பரமகுரு, பி.ஜீவா, பே.சு.நவமனியன், வி.சி.ஜெகன், சுப்புரு, பி.எம்.ரமேஷ்குமார், சு.அறிவழகன், அப்துல்வ ஹாப், நிரஞ்சன், ஆர்.ஹரேஷ்.

    புருசோத்தமன், ஆர்.யுவராஜ், ஆவின் சேகர், அருணா, பாக்கியலட்சுமி, லட்சுமிபாய், அந்தோணியம்மாள், பக்தா, எடைகுமார், பாகுலேயன், அமுல், நூர்ஜஹான், ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பகுதி இணை செயலாளர் எம்.ரபி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தினகரன் அணியில் இருந்து விலகி 70 வது வட்ட நிர்வாகி நீலகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். #GokulaIndira #ADMK

    ×