search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus conductor"

    • மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்

    ஈரோடு,

    ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    சென்னிமழை அருகே அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை மாணவிகளே போலீசில் ஓப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    கிருஷ்ணகிரியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.

    ×