என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government Demonstration"
- முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
- ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோடு,
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் முதல்- அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தார்.
முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன் சேர்மன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால் சூரிய சேகர் பிரதிநிதி கஸ்தூரி உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம்- மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோபிசெட்டிபாளையத்தில் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.பேசியதாவது:-
இன்றோடு அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவு பெறபோகிறது. அதே போல தி.மு.க. ஆட்சியும் முடியபோகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு சரி இருப்பது இல்லை. தற்போது கள்ளச்சாராயம் விற்பனையால் 22 பேர் இறந்து உள்ளனர்.
எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த ஆட்சியில் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதே போல 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
இதில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் பிரினியோகணேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுன் பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., அருள்ஜோதி கே.செல்வராஜ், வைகைதம்பி என்கிற ரஞ்சித்குமார், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், பெட்டிசன் மணி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோபி:
அ.தி.மு.க. சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (29-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு நாளை (29-ந் தேதி) காலை 9 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடக்கிறது. இதில் பவானி சாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்